வட மாநிலத்தைச் சேர்ந்த சோலார் டெக்னோ அலையன்ச் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அப்பணத்தை குறிப்பிட்ட நாட்கள் கழித்து, இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளது.
இந்த மோசடியில் கோவிந்தாவுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி ஷஷ்மிதா சாஹூ கூறியதாவது: ''பணமோசடி வழக்கு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்திவிருக்கிறோம்…. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் ''என்று தெரிவித்துள்ளார்.