வாரம் தோறும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று தமிழ் படங்கள் வெளியாகுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை 10 படங்கள் வெளியாக உள்ளது.
குறைந்த பட்ஜெட் படங்கள் வசூல் ஈட்டும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு பட ரிலீஸுக்கும் தேதி குறித்து தரப்படுகின்றன.
ஆனால், நாளை ஒரே நாளில் பத்து படங்கள் வெளியாவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கம் மீதும், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.