ஆரோகணம் கமர்ஷியலாக போகாத போதும் தொடர்ந்து படம் இயக்குவது என்ற கொள்கையிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பின் வாங்கவில்லை. அவரின் இரண்டாவது படத்துக்கு லாரிகளின் பின்புறம் எழுதி வைத்திருக்கும், நெருங்கிவா முத்தமிடாதே வாசகத்தை பெயராக்கியுள்ளார். அதன் டைட்டில் டிஸைனை தற்போது வெளியிட்டுள்ளனர்.