ஆந்திரா மீடியாவுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பின் தமிழில் அதிக கவனம் செலுத்துகிறார் நடிகர் சித்தார்த். நூற்றியெண்பது, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, உதயம் என தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காவியதலைவன், கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடித்துள்ள ஜிகிர்தண்டா இரண்டும் விரைவில் வெளியாகப் போகிறது.
சென்ற வருடம் சுனில் இப்ராஹிம் இயக்கத்தில் அருகில் ஓராள் திரைப்படம் வெளியானது. இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்த இதில் ரம்யா நம்பீஸன் டான்சராக நடித்திருந்தார். கார்ப்பரேஷன் தலைவியாக லேனாவும், மனநல மருத்துவராக பிரதாப் போத்தனும் வேடம் ஏற்றிருந்தனர். வெயிட்டராக முக்கிய வேடம் நிவின் பாலிக்கு.
மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த த்ரில்லரை சுனில் இப்ராஹிமே தமிழில் ரீமேக் செய்கிறார். இந்திரஜித் நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார். பிரதாப் போத்தன் நடித்த கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், லேனா கதாபாத்திரத்தில் மோனா, ரம்யா நம்பீஸனின் நடனக் கலைஞர் வேடத்தில் சானிகா நம்பியார் நடிக்க உள்ளனர்.