மம்முட்டி ஜோடி ஸ்ரேயா

வெள்ளி, 4 டிசம்பர் 2009 (19:25 IST)
அசின், நயன்தாரா போன்ற மலையாள நடிகைகளே மலையாளப் படங்களில் நடிப்பதில்லை. மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் சம்பளம் மிகக் குறைவு என்பதே இந்த பாராமுகத்துக்கு காரணம்.

ஆனால், ஸ்ரேயாவுக்கு பெ‌ரிய மனது. தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுழன்றடித்தாலும் மலையாளப் படத்துக்கும் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார்.

மம்முட்டி நடிப்பில் போக்கி‌ரிராஜஎன்ற படம் மலையாளத்தில் தயாராகிறது. இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார் ஸ்ரேயா. சம்பளம்...?

இந்தி, தமிழ், தெலுங்குடன் ஒப்பிடுகையில் ரொம்ப சொற்பம். கதைக்காக கால்ஷீட் கொடுத்ததாக கூறுகிறார் ஸ்ரேயா. இதற்காகவே ஒரு விருது ஸ்ரேயாவுக்கு கொடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்