பிரபுதேவாவுக்குப் பதில் பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவ கார்த்திகேயன்

திங்கள், 28 ஏப்ரல் 2014 (15:58 IST)
பார்த்திபன் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் சிவ கார்த்திகேயன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார்.
பார்த்திபன் படத்தில் கதை என்று எதுவுமில்லை. ஒரு சினிமா எடுப்பதற்கான கதை விவாதத்தைதான் படமாக்கி வருகிறார். கதை விவாதத்தில் காட்சிகளை எப்படி வைக்கலாம் என்று விவாதிப்பதை அப்படியே காட்சிகளாக எடுத்துள்ளனர். அதில் பிரபல நடிகர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் ஆர்யா, அமலா பால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.
 
அந்த வரிசையில் பிரபுதேவாவிடம் ஒரு பாடலுக்கு ஆட பார்த்திபன் கேட்டிருந்தார். இந்தியில் பிஸியாக இருக்கும் பிரபுதேவாவில் பார்த்திபனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இயலவில்லை. இப்போது அவருக்குப் பதில் சிவ கார்த்திகேயனை ஆட வைக்கும் முயற்சியில் இருக்கிறார் பார்த்திபன்.
 
இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்