நீங்க நல்லவரா கெட்டவரா! வெளியே வரப் போவது இவரா... கமல் சூசகம்

ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (13:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி 83  நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 

ஐஸ்வர்யா வெளியேறப் போவதில்லை என்பதை நேற்று கமல் உறுதி படுத்தி விட்டார். இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் விஜயலட்சுமியிடம் ,மும்தாஜ் விஜி ஜனனி சென்ராயன் உள்ளிட்ட இவர்களில் யார் வெளியே போனால் நியாயமாக இருக்கும் என்று கேட்கிறார்.
அதற்கு விஜயலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்பவர் மும்தாஜ் என்று கமலிடம் தெரிவித்தார். அடுத்ததாக சென்றாயன் பேசுகையில் இந்த டாஸ்கை உங்களுக்காக இன்னொருவர் செய்திருக்கிறார் என்று கூறுகிறார். அப்போது மும்தாஜ் பார்த்து நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கமல் கேட்கிறார். தொடர்ந்து எல்லோரும் ஆர்வமாக உச்சரித்த பெயர், ஆனால் இது நான் எதிர்பார்த்தது அல்ல என்று கமல் கார்டை எடுத்துக் காட்டுகிறார் . ஆனால் அதில் யார் என்பதை காட்டும்  முன்பு ப்ரோமோ முடிந்து விடுகிறது. இந்தப் ப்ரோமோவில்  வந்துள்ள தகவல்களை பார்க்கும்போது , நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்