ஹீரோ, ஹீரோயிசம் இல்லாத தேவதாஸ் பிரதர்ஸ்

சனி, 25 ஜூலை 2015 (15:17 IST)
பொதுவாக  சினிமாவில் கதைகள்  கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான்  பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள்  போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.
 
தேவதாஸ்  பிரதர்ஸ் படத்தில் அப்படிப்பட்ட ஹீரோவும், ஹீரோயிசமும்  இல்லாதபடி கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை  இயக்குபவர் கே.ஜானகி ராமன்.  இவர் இயக்குநர்கள் ஐஷ்வர்யா தனுஷ் ,சற்குணம், வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா  கற்றவர். 'திலகர் ' துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத் ,'மெட்ராஸ்' ஜானி ஆகிய  நால்வரும் நடித்து வருகிறார்கள். நாயகி சஞ்சிதா ஷெட்டி.
 
சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை,கே.கே நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் சம்பந்தமில்லாத  நான்கு பேர் ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில்  ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே கதை. அவர்கள்  யார் ? எப்படி ஒன்று  சேர்கிறார்கள்  என்பதே திரைக்கதையின் போக்கு. இது முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கும் கதை.
 
படத்துக்கு ஒளிப்பதிவு 'சலீம் 'பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா , இசை ''போடா போடி' படத்துக்கு இசையமைத்த தரன், படத்தொகுப்பு  'வேலையில்லா பட்டதாரி'யில்  பணியாற்றிய எம். வி. ராஜேஷ் குமார். படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆர் மதியழகன் ஆர் ரம்யா தயாரிக்கிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்