தமிழுக்கு வரும் நயன்தாரா படம்

திங்கள், 2 ஏப்ரல் 2012 (20:59 IST)
FILE
நயன்தாரா சீதையாக நடித்த புராணப் படம் ராம ரா‌ஜ்‌ஜியம் விரைவில் தமிழில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் சினிமாவிலிருந்து முற்றாக விலகுவதாகக் கூறி கண்கலங்க விடை தந்தார் நயன்தாரா. அவர் எதற்காக சினிமாவை துறக்க முடிவு செய்தாரோ, அந்தக் காதலைத் துறந்து மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். என்னே... ட்ராஜடி.

இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள். நயன்தாராவுக்கு சின்மயி குரல் தந்திருக்கிறார். ராம ரா‌ஜ்‌ஜியத்தை தமிழில் வெளியிட இன்னொரு காரணம் இளையராஜாவின் இசை. ராம ரா‌ஜ்‌ஜியத்துக்கு புராண கலர் கொடுத்ததில் இளையராஜாவின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.

விரைவில் சேலை கட்டிய நயன்தாராவை திரையில் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்