டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற காக்கா முட்டை

சனி, 23 ஆகஸ்ட் 2014 (17:39 IST)
மதிப்பு வாய்ந்த டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மணிகண்டனின் காக்கா முட்டை படம் விருது வென்றுள்ளது.
 
தமிழில் பல படங்கள் சர்வதேச விருதுகள் வாங்கியிருப்பதாக சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் சர்வதேச அளவில் பிரபலமில்லாத விருதுகள். முதல்முறையாக டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு தமிழ்ப் படம் விருது வென்றுள்ளது. சிறுவர்களை வைத்து மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம்தான் அது.
இந்தப் படத்தை வெற்றிமாறனும், தனுஷும் சேர்ந்து தயாரித்திருந்தனர். வட சென்னையை சேர்ந்த சிறுவர்கள் நடித்திருந்தனர். பள்ளியில் படிக்கும் அந்த மாணவர்கள் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து அவ்வப்போது ஓடிவிடுவதால் அவர்களை சென்னையிலுள்ள தனது அலுவலகத்தில் சுமார் ஒரு வருடம் தங்க வைத்தார் வெற்றிமாறன். பள்ளிக்கு அவரது அலுவலகத்திலிருந்து காரில் சென்று காரில் திரும்புவார்கள். பள்ளி இல்லாத நேரங்களில் படப்பிடிப்பு.
 
காக்கா முட்டை இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விருது வென்ற மணிகண்டனுக்கு நம்முடைய வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்