செருப்பு அணிந்ததால் சிக்கலில் மாட்டிய அமீர் கான்

சனி, 20 செப்டம்பர் 2014 (11:16 IST)
மத விஷயங்களில் நடிகர்கள் சின்னதாக உரசினாலே தீ பற்றியெரியும். சல்மான் கானின் ட்ரெஸ்ட் ஏற்பாடு செய்த ஃபேஷன் ஷோவில், அரபி எழுத்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பனியனுடன் ஒரு மாடல் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பி நீதிமன்றம்வரை சென்றது. இப்போது சிக்கலில் மாட்டியிருப்பவர் அமீர் கான்.
இவர் நடிக்கும் பிகே படத்தின் படப்பிடிப்பு மும்பையிலுள்ள கோவிலில் நடந்தது. அப்போது கோவிலுக்குள் செருப்புடன் சென்றார் அமீர் கான். அதனை கண்ட பக்தர்கள் செருப்புடன் உள்ளே வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் சில இந்து அமைப்புகள் அமீர் கானுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.
 
பிகே படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக போஸ் தந்த சிக்கலில் இருந்து இப்போதுதான் அமீர் கான் கரையேறியிருக்கிறார். அதற்குள் செருப்பால் இன்னொரு சிக்கல்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்