2013-ன் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு தமிழ் திரைப்படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வாகியுள்ளது. சிவ கார்த்திகேயனை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய முக்கியமான படம் இது. வேலை வெட்டியில்லாத, தினமும் யாருக்காவது காதல் கடிதம் தரும், டீச்சருக்கு மாணவியிடம் காதல் கடிதம் தந்துவிடும் கதாபாத்திரத்தை சிவ கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தார். இந்தப் படத்தை சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக தேர்வு செய்து அதன் தயாரிப்பாளர் மதனுக்கு இன்று மாலை நடக்கும் விழாவில் விருது அளிக்க இருக்கிறார்கள்.