தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர் சூர்யா, இவர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.
இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூன் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே எடுத்துவிட்டு, அடுத்து கோவாவுக்கு புறப்பட உள்ளார்கள் என தகவல் வெளியானது.
பிதாமகன், நந்தா ஆகிய படங்களை அடுத்து, சூர்யா- பால இருவரும் இணைந்துள்ள இப்ப்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்திற்கு கடலாடி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.