மும்பையைச் சேர்ந்த சயிஷா, நாகர்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர், அஜய் தேவ்கனுடன் ‘ஷிவாய்’ படத்தில் நடித்தவருக்கு, தமிழில் ‘வனமகன்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னுடைய திறமையை நிரூபித்ததால், பிரபுதேவா இயக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘வனமகன்’ படம் ‘ஆஹா… ஓஹோ…’ இல்லையென்றாலும், சயிஷாவின் நடிப்புக்கு 200 மார்க் கிடைத்திருக்கிறது.
இதனால், தன்னம்பிக்கை பெற்றுள்ள சயிஷா, தான் தோற்ற தெலுங்கில் எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என சபதம் எடுத்துள்ளார். எனவே, சென்னையில் தங்காமல் ஐதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். அந்த வீடு, முன்னர் சமந்தா தங்கியிருந்த வீடு. அந்த வீட்டில் தங்கியிருந்த போதுதான் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தாராம் சமந்தா. அந்த அதிர்ஷ்டம், சயிஷாவுக்கும் கிடைக்குமா என்று பார்க்கலாம்.