குத்துப் பாட்டுக்கெல்லாம் உங்க குண்டு உடம்பு தாங்குமா?

புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:20 IST)
கானா மற்றும் குத்துப்பாடல் என்றால் தேவாவுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவைதான் தேடிப் போகிறார்கள் இயக்குனர்கள். அவரும் வஞ்சனை இல்லாமல் கானாவையும், குத்துவையும் வாரி வழங்குகிறார். இவரிடம் வேலை பார்ப்பதில் உள்ள சௌகரியம், எதற்கும் இவர் முகம் சுழிப்பதில்லை.
 
நண்பர்கள் நற்பணி மன்றம் என்ற படம் ராதாபாரதி இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் இடம்பெறும் குத்துப் பாடலில் நீங்க ஆடினால் நல்லாயிருக்கும் என்று ராதாபாரதி ஸ்ரீகாந்த் தேவாவிடம் கூறியிருக்கிறார். கட்டழகி சின்ன, பொட்டழகி உன்னை... எனத் தொடங்கும் இந்தக் குத்துப் பாடல் கோயில் திருவிழா பின்னணியில் வருகிறது. 
 
இதற்கு முன் பல படங்களில் பாடல் காட்சியில் தோன்றியுள்ள ஸ்ரீகாந்த் தேவா, இந்த குத்துப் பாடலிலும் நடனம் ஆட சம்மதித்து அட்டகாசமாக ஆடியுள்ளார். படத்தின் நாயகன் ஜெய்நாத், வைபவி என்ற நடனக் கலைஞர் ஆகியோரும் இதில் ஆடியிருக்கிறார்கள்.
 
தனது குண்டு உடம்புக்கு குத்துப் பாட்டு சரிப்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் இயக்குனரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. 
 
மனுசனுக்கு மனசும் பெரிசுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்