ஒரு வ‌ரி கதையை இரண்டரை மணி நேர படமாக்கிய கஸ்தூ‌ரி ராஜா

சனி, 1 பிப்ரவரி 2014 (10:39 IST)
கஸ்தூ‌ரி ராஜா இஸ் பேக். இந்தமுறையும் டஜன் கணக்கில் புதுமுகங்கள். மித்ரன், சுவேஷா சாவந்த், ஸ்ருதி பட்டேல் என்று அறிமுகமில்லாத பெயர்கள். ஆனால் கதை... அனைவரும் அறிந்தது, அனுபவிப்பது.
FILE

இன்று உறவுகள், பாசம், காதல் எல்லாவற்றையும் பணம் ஓவர்டேக் செய்திருக்கிறது. காசும், போதை பழக்கமும்தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றியுள்ளது என்ற ஒருவ‌ரி கதையையே இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறாராம்.

(தியேடர் பாஸ்கரன் இந்த ஒருவ‌ரியை கேட்டால் வருத்தப்படுவார். மனித குணத்தைவிட மேலானது மிருக குணம். மிருகங்கள் தங்களின் தேவைக்கு மட்டுமே கொல்லும். யாரையும் குண்டு வீசி அழிப்பதில்லை. கூட்டாக வன்புணர்ச்சி செய்வதுமில்லை. மிருக குணம், காட்டுமிராண்டித்தனம் போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துவது அபத்தமானது. முடிந்தவரை தவிர்ப்போம்)

பேக் டு கஸ்தூ‌ரி ராஜா. இது அவ‌ரின் 23 வது படம். முழுக்க புதுமுகங்களை மட்டும் போடாமல் வெயிட்டான ரோலில் பிரபு, ராதிகா இருவரையும் நடிக்க வைத்திருக்கிறார். கஸ்தூ‌ரி ராஜாவின் மகள் டாக்டர் விமலகீதா தயா‌ரிப்பு.

படத்தின் பெயர் காசு பணம் துட்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்