எனக்குப் பிடித்ததே ஜனனி ஜனனி பாடல்தான்

வெள்ளி, 6 ஜூன் 2014 (11:36 IST)
சலீம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை அமர்க்களமாக நடத்தினார் விஜய் ஆண்டனி. சலீம் பட போஸ்டர்களில் முஸ்லீம் கெட்டப்பில் அவரைப் பார்க்கும் யாரும் முஸ்லீம் என்றே அவரை நினைத்துப் போவார்கள். இதை ஒரு கேள்வியாக முன் வைக்காமல் இருப்பார்களா? கேட்டே விட்டார்கள்.
எனக்கு சாதி மத இன பேதமெல்லாம் கிடையாது. சொல்லப் போனால் எனக்குப் பிடித்த பாடலே ராகவேந்திரா படத்தில் வரும் ஜனனி ஜனனிதான். திரையுலகில் பலரும் முஸ்லீமாக மதம் மாறி வருகிறார்கள். ஆனால் நான் அப்படி மதம் மாறுவதாக இல்லை என்றார்.
 
நான் படம்தான் விஜய் ஆண்டனிக்கு பிள்ளையார்சுழி. அதில் சலீம் என்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்தார். நான் வெற்றி பெற்றதால் சென்டிமெண்டாக இரண்டாவது படத்துக்கு சலீம் என்பதை பெயராக வைத்துள்ளார். இதிலும் விஜய் ஆண்டனி முஸ்லீமாக வருகிறார்.
 
"அப்படியானால் சலீம் நான் படத்தின் இரண்டாவது பாகமா?"
 
"படத்தைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."
 
ரகசியமே உன் பெயர்தான் விஜய் ஆண்டனியா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்