2010-ல் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நவ்யா நாயர் அதன் பிறகு அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வருகிறார். அவரது ரீ என்ட்ரி மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக தொடங்கியது. பிறகு 2012 -ல் மலையாளப் படமான சீன் ஒந்நு நம்முடெ வீடு படத்தில் நடித்தார். அதன் பிறகு கன்னடப் படம் த்ரிஷ்யா.
மலையாளத்தில் பம்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக் இந்த த்ரிஷ்யா. பி.வாசு இயக்கிய இந்தப் படம் இன்று (20) திரைக்கு வந்துள்ளது. மோகன்லால் நடித்த வேடத்தில் ரவிச்சந்திரனும், மீனா நடித்த வேடத்தில் நவ்யா நாயரும் நடித்துள்ளனர். கதைப்படி நவ்யா 13 வயது சிறுமிக்கு தாய்.