அஞ்சான் அட்டகாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்

வியாழன், 1 மே 2014 (18:03 IST)
அஞ்சான் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் சூர்யா, சமந்தாவுடன் இந்திப்பட உலகைச் சேர்ந்த சில நடிகர்களும் நடித்துள்ளனர். மும்பையை களமாகக் கொண்டு தயாரான படம் என்பதால் இந்தியில் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடும் திட்டமும் தயாரிப்பு தரப்புக்கு உள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சானை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை இன்று வெளியிட்டனர். நேற்று படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டது.
அஞ்சானில் சூர்யாவுக்கு இரு வேடங்கள் என கூறப்படுகிறது. தாடியுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்த மும்பை டான் கதாபாத்திரத்தின் படங்களை மட்டும் பர்ஸ்ட்லுக்கில் வெளியிட்டுள்ளனர்.
 
படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.
மேலும் படங்கள் அடுத்த பக்கம்..

அஞ்சான் பர்ஸ்ட்லுக் படங்கள்








 



 

அஞ்சான் பர்ஸ்ட்லுக் படங்கள்














 

வெப்துனியாவைப் படிக்கவும்