சென்னை பாக்ஸ் ஆபிஸ்

திங்கள், 28 ஜனவரி 2013 (18:56 IST)
4. பத்தாயிரம் கோடி
விவேக் நடித்திருக்கும் இந்த பத்தாயிரம் கோடி ரசிகர்களின் கடைக்கண் பார்வையைகூட பெறவில்லை. வெளியான முதல் மூன்று தினங்களில் 2.43 லட்சங்களை மட்டுமே வசூலித்து தயாரிப்பாளரின் கையை பதம் பார்த்துள்ளது.

3. அலெக்ஸ் பாண்டியன்
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை நிரூபித்த அலெக்ஸ் பாண்டியனார் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறார். வார இறுதியில் 15.3 லட்சங்களையும், வார நாட்களில் 13.4 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. ஆறு தினங்களில் மூன்று கோடியை தாண்டிய படம் மூன்று வாரங்கள் முடிந்த பிறகும் 4.2 கோடியில் திணறிக் கொண்டிருப்பது பரிதாபம்.

2. சமர்
பிதாகரஸின் தியரிப்படி அலெக்ஸ் பாண்டியன் என்ற சின்ன கோடு சமரை பெரிய கோடாக காண்பித்திருக்கிறது. வார இறுதியில் 27.2 லட்சங்கள், வார நாட்களில் 28.3 லட்சங்கள் என கல்லா கட்டி இரண்டாவது இடத்துக்கு தாவிய சமர் இதுவரை 1.5 கோடியை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது என்பது கொஞ்சம் சோகமான செய்தி.

1. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா
சந்தானத்தின் திருட்டு லட்டு பவர் ஸ்டாரின் தயிர் வடை பெர்ஃபாமன்ஸில் வீரநடை போடுகிறது. வார இறுதியில் 1.21 கோடியும், வார நாட்களில் 1.23 கோடியும் வசூலித்து பலரின் வயிற்றில் ஃபயர் வரவழைத்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 5.7 கோடிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்