அரை‌‌யிறுதி‌க்கு செ‌ல்லுமா இ‌ந்‌தியா: இலங்கையுட‌ன் இன்று மோதல்

செவ்வாய், 11 மே 2010 (09:47 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இ‌தி‌லவெ‌ற்‌றி பெ‌ற்றா‌லம‌ட்டுமஇ‌ந்‌திஅ‌ணி‌க்கஅரை‌யிறு‌தி‌க்கசெ‌ல்வா‌ய்‌ப்பஉ‌ள்ளது. அதுவு‌ம் ர‌ன் ரே‌ட் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் இது நட‌க்கு‌ம்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீ‌வி‌லநடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர்-8 சுற்றில் `எப்' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

இதில் செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்டரேலியா- மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணிகள் சந்திக்கின்றன.

'எப்' பிரிவில் ஆஸ்‌ட்ரேலியா, இலங்கை, மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு, இந்தியா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றில் தொடர்ந்து 2 வெற்றி கண்ட ஆஸ்‌ட்ரேலியா 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி சூப்பர்- 8 சுற்றில் ஆஸ்‌ட்ரேலியா, மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பு மங்கிய நிலையில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் ரேட் -1.575 ஆகும்.

இலங்கை அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் -0.600 ஆகும். மற்றொரு அணியான மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு 2 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் (நிகர ரன் ரேட் -1.075) பெற்று இருக்கிறது.

புள்ளி கணக்கை தொடங்காத இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் காணப்பட்டாலும், அரை இறுதி வாய்ப்பு அடியோடு போய்விட்டது என்று சொல்ல முடியாது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் இந்திய அணி அரை இறுதிக்குள் நுழையலாம்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, மிகப்பெரிய வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவஅணி, ஆஸ்‌ட்ரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா, இலங்கை, மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவஅணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அணிகளின் நிகர ரன் ரேட் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதில் இந்திய அணி நல்ல ரன் ரேட்டுடன் இருந்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்று, மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணி, ஆஸ்‌ட்ரேலியாவை வீழ்த்தினால் ஆஸ்‌ட்ரேலியாவுடன் இணைந்து மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅணி அரை இறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டு, ஆஸ்‌ட்ரேலியா, ம‌ே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவவீழ்ந்தால் ஆஸ்‌ட்ரேலியா, மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு, இலங்கை ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன் ரேட் கணக்கில் கொள்ளப்படும். ஆஸ்‌ட்ரேலிய அணி நல்ல ரன் ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்