இ‌ன்று முதலாவது அரைஇறுதி: இங்கிலாந்து - இலங்கை மோதல்

வியாழன், 13 மே 2010 (12:39 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

மே‌ற்‌கி‌ந்‌தி ‌தீ‌வி‌லநடந்து வரு‌மூன்றாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினத்துடன் சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இதில் 'இ' பிரிவில் இருந்து இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும், 'எப்' பிரிவில் இருந்து ஆஸ்‌ட்ரேலியா, இலங்கை அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் செயின்ட் லூசியாவில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை எந்த ஒரு ஐ.சி.சி. கோப்பையும் வெல்லாத அணி இங்கிலாந்தாகும். நீண்ட ஆண்டுகளாக அவர்களை துரத்தி வரும் இந்த சோகத்துக்கு இந்த முறை எப்படியும் முடிவு கட்டி விட வேண்டும் என்ற முனைப்புடன் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

தனது குழந்தையை பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்த பீட்டர்சன் இங்கிலாந்து அணியுடன் இணைவதால் பேட்டிங் பலத்தை மேலும் வலுப்படுத்தும்.

2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நோக்குடன் இலங்கை அணி வியூகங்களை வகுத்து வருகிறது. சூப்பர்8 சுற்றில் இந்தியாவை கடைசி பந்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் அவர்கள் களம் இறங்குகிறார்கள்.

மேத்யூஸ், கபுகேதரா, சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஜெயசூர்யா, தில்ஷன் ஆகியோரும் தங்களது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இலங்கையை வீழ்த்துவது கடினமாகி விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்