செய்முறை:
அசிரியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்து மாவாக அரைத்து கொள்ளவும். பிறகு சல்லடையால் சலித்து வைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஆவியில் வேகவைக்கவும்.
வெந்த மாவை சுடு தண்ணீர் தெளித்து, மிக சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு கொதித்ததும் சர்க்கரை போட்டுக் கலந்து, உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போடவும். நன்கு கிளறி விடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய்த் துறுவல், ஏலக்காய் பொடி போட்டு இறக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.