அசத்தும் சுவையில் பால் பணியாரம் செய்வது எப்படி?

திங்கள், 28 நவம்பர் 2022 (15:10 IST)
சுவையான பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி -100 கிராம் 
உளுந்து 75கிராம்
பசும்பால்- 200கிராம் 
தேங்காய் பால்- ஒரு டம்பளர்
சர்க்கரை- 100 கிராம் 
ஏலக்காய் பொடி- சிறிதளவு
பொறிக்க எண்ணெய்- தேவையான அளவு 
 
செய்முறை
 
பச்சரிசியையம் உளுந்தையும் ஐந்து மணி நேரம் நன்றாக ஊற வைத்து அரைக்கவும். பின்னர் இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 
வெள்ளை நிறமாக இருக்கும்போதே எடுக்கவேண்டும். பொரித்து எடுத்த உருண்டைகளை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும். இப்போது சுவையான பால் பணியாரம் ரெடி. 
 
பால் செய்யும் முறை: 
 
பசும் பாலை நன்றாக காய்ச்சி இறக்கும் சமயத்தில் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். இதில் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்க்கவும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்