மொபைல் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்:அதிர்ச்சி தகவல்

சனி, 22 ஜூன் 2019 (17:10 IST)
மொபைல் ஃபோனை அதிக நேரம் பயன்படுத்தினால் தலையில் பின்புறமுள்ள மண்டை ஓட்டில் கொம்பு முளைக்கும் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மொபைல் ஃபோன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. தொடர்புகொள்ள, புகைப்படம் எடுக்க, திரைப்படம் பார்க்க, மட்டுமல்லாமல் தொழில் ரீதியாகவும் மொபைல் பயன்படுகிறது.

இதையும் தாண்டி மொபைல் கேம்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிமையாகி உள்ளனர். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் மொபைல் ஃபோனிலேயே குடியிருக்கின்றனர்.

ஆதலால் பெரும்பாலான நேரங்களில் கழுத்தை மட்டுமல்லாமல் உடம்பையும் குனிந்து கொண்டே மொபைல் ஃபோனை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு  மொபைல் ஃபோனை அதிகமாக குனிந்தபடியே பயன்படுத்தும்போது தலையின் மொத்த எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் தசை நார்கள் வளர்ந்து, தலையின் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்கிறது என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆதலால் சிறிது நேரம் மட்டுமே மொபைல் ஃபோனை பயன்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த செய்தி மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்