ஒன்னு இல்லன்னா இன்னொன்னு... காதல் தோல்வி குறித்து ஓவியா பதில்!

புதன், 21 டிசம்பர் 2022 (14:39 IST)
நடிகை ஓவியா தன் காதல் ஹொல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்!
 
பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
 
அதற்கு முன்னர் களவாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்து அறிமுகமான ஓவியா பின்னர் 18+ அடல்ட் கன்டென்ட் கொண்ட படங்களிலெல்லாம் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது காதல் தோல்வி குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார். 
 
அதில், காதல் தோல்வியானால் வாழ்க்கையே முடிஞ்சிதுன்னு அர்த்தம் இல்லை. கண்டிப்பா ஒரு பஸ் போனால் இன்னொரு பஸ் வரும். நீங்க எப்போதும் அன்போடு எல்லோரிடமும் பழகுங்கள் சரியானவர்கள் சரியான நேரத்தில் வருவார்கள். என கூலாக பதில் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்