இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:36 IST)
இலங்கையில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
 
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1.பிரதமர் ரணில் விக்ரமசிங்க- தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி
2.ஜோன் அமரதுங்க- சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகாரம்
3.நிமல் சிறிபால டி சில்வா- போக்குவரத்து
4.ரவி கருணாநாயக்க - நிதி
5.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு
6.அனுர பிரியதர்ஷன யாப்பா - முதலீட்டு மேலாண்மை
7.அர்ஜுன ரணதுங்க- துறைமுகங்கள்
8.திலக் மாரப்பன- சட்டம்-ஒழுங்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
9.எம்.கே.டி.எஸ் குணவர்தன- காணி
10.பழனி திகாம்பரம்- மலையகம், புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி
11.சந்திராணி பண்டார - பெண்கள் மற்றும் சிறார் நலத்துறை
12.தலத்தா அத்துகோரள - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
13.அகில விராஜ் காரியவசம் - கல்வி
14.டி.எம். சுவாமிநாதன்- புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்
15.சந்திம வீரக்கொடி- பெற்றோலியத் துறை
16.தயாசிறி ஜயசேகர - விளையாட்டுத்துறை
17.மனோ கணேசன்- தேசிய கலந்துரையாடல்கள்
18.தயா கமகே - சிறுதொழில்கள்
19.ஹரின் பெர்ணாண்டோ- தொலைத்தொடர்பு துறை
20.கபீர் ஹஷீம் - அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி
21.சாகல ரத்நாயக்க - தெற்கு அபிவிருத்தி
22.ரவூப் ஹக்கீம்- நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
23.அப்துல் ஹலீம் மொஹமட் ஹாஷிம்- தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்
24.கயந்த கருணாதிலக்க- ஊடகம் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு
25.ரஞ்சித் மத்துமபண்டார- அரச நிர்வாகம்
26.வஜிர அபேவர்தன- உள்துறை
27.டப்.டி.ஜே. செனவிரத்ன- தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள்
28.ராஜித்த சேனாரத்ன- சுகாதாரம்
29.காமினி ஜயவிக்ரம பெரேரா- வனவளங்கள்
30.எஸ்.பி. நாவின்ன- கலாசாரம்
31.மகிந்த அமரவீர- மீன்பிடி, நீரியல் வளம்
32.சம்பிக ரணவக்க- பெருநகரம், மேல்மாகாண அபிவிருத்தி
33.லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தெருக்கள், பல்கலைக்கழகக் கல்வி
34.மகிந்த சமரசசிங்க- தொழில்பயிற்சி மற்றும் அபிவிருத்தி
35.நவீன் திஸாநாயக்க- பெருந்தோட்ட அபிவிருத்தி
36.ரஞ்சித் சியம்பலாபிட்டிய- எரிசக்தி
37.துமிந்த திஸாநாயக்க- விவசாயம்
38.விஜேதாஸ ராஜபக்ஷ- நீதி, பௌத்த விவகாரம்
39.பீ.ஹெரிசன்- கிராமிய பொருளாதாரம்
40.எஸ்.பி.திஸாநாயக்க- சமூகநலத் துறை
41.சுசில் பிரேம்ஜயந்த- தொழில்நுட்பத் துறை
42. ரிஷாட் பதியுதீன்- தொழில், வணிகம்

வெப்துனியாவைப் படிக்கவும்