கொழும்புவின் மினுவாங்கொட பகுதியின் மிரிஸ்வத்த என்ற இடத்தில் அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் சிக்கிக் கொண்டதால் வாகனத்தில் இருந்த 2 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் 2 அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர். உயிரிழந்த 4 அதிகாரிகளில் ஒருவர் பெண் அதிகாரியாவார்.