சந்திரிகா மீதான குண்டு வைத்த வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

வியாழன், 1 அக்டோபர் 2015 (21:16 IST)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, 1999 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சந்திரிகா படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதல் நடத்திய இருவருக்கு கொழும்பு நீதிமன்றம் நீண்டகால ஆயுள் சிறை தண்டனை தீர்ப்பு அளித்துள்ளது.
 
வேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் தலா 290 மற்றும் 300 வருடங்கள் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்துள்ளது.
 
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே,வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
 
தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அளித்த நீதிபதி பத்மினி ரணவக்க  தெரிவித்துள்ளார்,
 
சந்திரிகா குமாரதுங்க மீது கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து குண்டுத் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
 
எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்