இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் எனப் பலராலும் போற்றப்பட்டவர். சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இப்போது ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.