ரயில்வேக்கு 35,000 கோடி நஷ்டம்: மொத்த வருமானத்தை முழுங்கிய கொரோனா!

புதன், 29 ஜூலை 2020 (11:06 IST)
கொரோனா காரணமாக ரயில்வேயும் கிட்டதட்ட ரூ.35,000 கோடிக்கு வருமான இழப்பை சந்திக்க கூடும் என தகவல். 
 
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  
இந்நிலையில், தற்போது இந்தியா முழுவதும் ரயில் மற்றும் விமான சேவை கடந்த நான்கு மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் விமான சேவை பெரும் சரிவை சந்தித்துள்ளது. 
 
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உள்ளூர் விமான சேவை 86.5%, சஎவதேச விமான சேவை 97% இழப்பை கண்டுள்ளது. எனவே, இந்த சரிவில் இருந்து மீள கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து ரயில்வேயும் கிட்டதட்ட ரூ.35,000 கோடிக்கு வருமான இழப்பை சந்திக்க கூடும் என ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது  10 - 15% மட்டுமே ரயில்வே வருமான பார்த்துள்ளது என தெரிவித்துள்ளார். 
 
மேலும் பயணிகள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரக்கு ரயில்கள் மூலம் ஈடுகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்