அமெரிக்காவின் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணி இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில், 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் உலக தடகளத்தில் வெள்ளி வென்றுள்ளார்.