மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி ரத்தான நிலையில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
190 என்ற எளிய இலக்கை இந்தியா விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவிச்சில் அனல் பறந்ததால் இந்திய அணி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. ரஹானே 60 ரன்களும், தோனி 54 ரன்களும் எடுக்க மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒன்றை இலக்க எண் ரன்களில் அவுட் ஆகினர்.