அதேபோல் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ள ஐதராபாத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் வரும் 7-ந்தேதி அவர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இன்றும், 6-ந்தேதியும் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் உள்ளார் என்பது தெரிந்ததே