ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

Siva

வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக சரியாக பேட்டிங் செய்யாத நிலையில் அவர் மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அவர் ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார் என்ற செய்தி அறிந்ததும், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அவரது ஆட்டத்தை பார்க்க விரும்பினார்கள். அவரது ஆட்டத்தை காண, நேற்று முதல் கூட்டம் குவிந்த நிலையில், அவர் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனால், ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரயில்வே மற்றும் டெல்லி அணிகளுக்கான போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணை 241 ரன்களில் அவுட் ஆனது. இதனை அடுத்து, விராட் கோலி இடம் பெற்ற டெல்லி அணி பேட்டிங் செய்த நிலையில், சங்வான் பந்துவீச்சில் விராத் கோஹ்லி 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால், அவரது ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், டெல்லி அணி தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் விளையாடும் போது பேட்டிங்கில் சொதப்பிய கோஹ்லி, தற்போது ரஞ்சி கோப்பையிலும் சொதப்பி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்