விராத் கோஹ்லியின் புதிய சாதனை: சச்சின் சாதனையை முந்தினார்!

புதன், 2 டிசம்பர் 2020 (10:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும், இன்றைய போட்டியில் சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் மிக வேகமாக 12 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். அவர் மொத்தம் 248 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு முன்னர் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்சில் தான் எடுத்தார் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சச்சினை விட அதிவேகமாக 12000 ரன்கள் என்ற சாதனையை ஏற்படுத்தி சச்சின் சாதனையை முந்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ரிக்கி பாண்டி 314 போட்டிகளிலும், சங்கரகரா 336 போட்டிகளிலும், ஜெயசூர்யா 379 போட்டிகளிலும் விளையாடி 12000 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்