இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கும் கார்களையும் நேசிப்பவர். மிகத் தீவிரமான கார் பிரியரான அவர் விதவிதமான பல கார்களை வாங்கி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பவர். இந்நிலையில் இப்போது புதிதாக ஆடி நிறுவனத்தின் க்யூ 8 என்ற புதிய மாடல் காரை அறிமுகமான மூன்றாம் நாளே அவர் வாங்கியுள்ளார்.