இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொபைல் பிரிமியர் லீக் என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் தான் இப்போது இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சர் செய்துள்ளது. இதனால் ஆதாயம் தரும் இரட்டை வணிக லாப நோக்கு காரணமாக இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் 2019 ஆம் ஆண்டு முதலீடு செய்த நிலையில் 2020 ஆம் ஆண்டே அந்நிறுவனம் இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சர் செய்வது சர்ச்சைக்கு ஆதாரமாக எழுந்துள்ளது.