உசேன் போல்ட்டுக்கு கொரோனாவா? தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:32 IST)
உலகின் மிக வேகமான மனிதர் என சொல்லப்படும் உசேன் போல்ட் கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளவர் உசேன் போல்ட். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அதில் கலந்துகொண்ட பலரும் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தனர். இதனால் போல்ட்டுக்கு கண்டனங்கள் எழ இப்போது அவர் தான் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் முடிவுக்கு காத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

மேலும் அவர் ’என்னால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் ‘ எனவும் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்