U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்

செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:54 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி பேட்டிங்கில் களமிறங்கிய நிலையில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோஹைல் நசீர் 62 ரன்களும் ஐதர் அலி 56 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கார்த்திக் தியாகி, மிஸ்ரா, அபிஷேக் ஆகியோர் அபாரமாக பந்து வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் 42 ஓவர்களில் 144 ரன்களே எடுத்தால் இந்திய அணி அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்