நிறுத்தப்படுமா ஒலிம்பிக் ? டோக்கியோ கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சனி, 17 ஜூலை 2021 (12:27 IST)
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்  கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு உள்ளிட்டவை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இப்படியான நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு தொற்று இருப்பதை டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தியுள்ளார். 
 
அதையடுத்து அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் யார் என்கிற விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். போட்டிகள் துவங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஒலிம்பிக் நிறுத்தபடுமோ என்கிற வருத்தத்தில் உள்ளனர் விளையாட்டு ஆர்வலர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்