டி.என்.பி.எல் கிரிக்கெட்: நெல்லை அணி அபார வெற்றி!

சனி, 16 ஜூலை 2022 (12:03 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட்: நெல்லை அணி அபார வெற்றி!
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த லீக் போட்டியில் நெல்லை அணி திருச்சி அணியை தோற்கடித்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
 
நேற்றைய போட்டியில் நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. சஞ்சய் யாதவ் 103 ரன்களும், அபராஜித் 92 ரன்களும், எடுத்தன.
 
 இதனை அடுத்து 237 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அபாரமாக விளையாடிய 121 ரன்கள் எடுத்தார்.
 
இதனையடுத்து நெல்லை அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக புள்ளி பட்டியலில் தற்போது நெல்லை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்