முதல் இன்னிங்ஸில், கர்நாடக அணி 36.5 ஓவர்களில் 103 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்ஸில், அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு, கோவா அணி 413 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடகா 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் அர்ஜுன் டெண்டுல்கர், 4 விக்கெட்டுகளை எடுத்தார், அவருடைய அபார பந்து வீச்சால் கோவா அணி இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.