இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

vinoth

வியாழன், 10 ஜூலை 2025 (08:11 IST)
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. இரு போட்டிகளுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக மைதானம் மிகவும் தட்டையாக அமைக்கப்படுவதுதான் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி தொடங்கவுள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் இந்த மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த போட்டியில் இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட பும்ரா களமிறங்குகிறார். அதே போல நான்காண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஜோஃப்ரா ஆர்ச்சரும் களமிறங்குகிறார். இதனால் போட்டியின் விறுவிறுப்புத் தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்