டி-20 உலகக் கோப்பை : சிங்கப் பெண்கள் ... ஆஸ்திரேலியா அணி சேம்பியன் !!

ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:42 IST)
டி-20 உலகக் கோப்பை : சிங்கப் பெண்கள் ... ஆஸ்திரேலியா அணி சேம்பியன் !!

உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வந்த நிலையில் தற்போது, ஆஸ்திரேலிய அணி, 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் அடித்தது. அந்த அணியின் ஹீலே 75 ரன்களும், மோனே 78 ரன்களும் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 18 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்ததில் தற்போது இந்திய அணி 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 99 ரன்களுக்கு அவுட் ஆனது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33, ரிச்சா கோஷ் 18  ரன்கள் எடுத்தனர்.
டி-20 உலகக் கோப்பை : சிங்கப் பெண்கள் ... ஆஸ்திரேலியா அணி சேம்பியன் !!
ஆஸ்திரேலிய சிங்கப்பெண்கள் தொடர்ந்து 5 வது முறையாக டி-20 உலகப் கோப்பையை வென்று சாதித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்