சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை இன்று வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் கே எல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் 816 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.