இந்த இலக்கை இலங்கையால் எட்டுவது கடினன் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பவுலர்களின் பந்துவிச்சை அடித்து நொறுக்கி 48.4 ஓவர்களில் இலங்கை அணி 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என்றும், அஸ்வின் இல்லாத அருமை இப்பொழுதுதான் தெரிகிறது என்றும் நெட்டிஸன்கள் டுவிட்டரில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.