இலங்கை - வங்கதேச அணியின் டெஸ்ட் போட்டியின் முடிவு என்ன தெரியுமா?

வியாழன், 19 மே 2022 (19:08 IST)
இலங்கை - வங்கதேச அணியின் டெஸ்ட் போட்டியின் முடிவு என்ன தெரியுமா?
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது
 
இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் பதிலடியாக 465 ரன்கள் குவித்தது
 
இதனையடுத்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடி 199 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் மாத்யூஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்