முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வென்றது ஆப்கானிஸ்தான்..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (18:19 IST)
இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இலங்கை முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் அஸ்லாங்கா 91 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் 46.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் 98 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்