முதல் தங்கத்தை வென்றது இலங்கை

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:24 IST)
ரஞ்சன் அருண் பிரசாத் மூலம் பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றது இலங்கை. 
 
2020 டோக்யோ பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தினேஷ் பிரியந்த ஹேரத், தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
 
ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 67.79 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, தமது சாதனையை நிலைநாட்டியுள்ளார். இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, , விளையாட்டுத்துறை அமைச்சர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்